பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு!...ECR-ல் போலீசார் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்ற இரண்டு சிறுவர்களை, மனோவின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், மதுபோதையில் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படும் நிலையில் இந்த தாக்குதலால் அந்த 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்  பேரில் வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று அவரது மகனிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் மனோவின் மகன்களான ரபீக், சாகீர் மற்றும் அவரது நண்பர்கள் என 5 பேர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விக்னேஷ் , தர்மா 2 பேரை  போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மனோவின் 2 மகன்கள் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மனோவின் மகன்கள் ஈசிஆரில் இருப்பது 
செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்ததை அடுத்து, வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை  போலீசார் ஈசிஆர் விரைந்துள்ளனர் .

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singer Manos sons absconding Police raid in ECR


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->