சிம்பு வீட்டில் புதுவரவு.. குஷியில் குடும்பத்தினர்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளர் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று பல்வேறு முகங்களை கொண்டவர் தான் டி.ராஜேந்திரன்.சமீப காலமாக இவர் எந்த படத்தில் நடிக்காமல் இருந்து வருகின்றார்.

ஒரு காலகட்டத்தில் இவர் இயக்கி நடிக்கின்ற குடும்ப பங்கான திரைப்படங்களுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது. அது டிஆரின் பொற்காலம் என்று கூறினால் மிகையாகாது. இவரை தொடர்ந்து டி.ஆரின் மகன் சிலம்பரசனும் சினிமாவில் சிறு வயதில் இருந்தே நடித்து வருகின்றார்.

நடிகர் சிம்புவுக்கு இலக்கியா என்ற தங்கையும், குறளரசன் என்ற தம்பியும் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது. தங்கை இலக்கியாவுக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக சிம்புவின் தங்கைக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது 

இது பற்றிய தகவலை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிம்புவின் வீட்டுக்கு புதிய வாரிசு வந்துள்ளதால் சம்பவம் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu sister Get Second Baby


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->