நாட்டுப்புற பாடகர் செந்தில், ராஜலட்சுமியா இது? முழுவதும் கெட்டப் மாறி வெளியான புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரமாண்டமான நிகழ்ச்சியான  சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர்.மேலும் நாட்டுப்புற பாடகர்களாகிய இவர்கள் சொந்தமாக தாமே பாடல்களை எழுதி, பாடி அரங்கத்தையே அசரவைத்தனர்.    
 
இந்த போட்டியில் சில சுற்றுகளிலேயே ராஜலக்ஷ்மி வெளியேற்றப்பட்டதை தொடந்து, செந்தில் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பின்னர்  செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு  சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. மேலும் அவர்கள் சார்லின் சாப்ளின் 2 மற்றும் விஸ்வாசம் படத்தில் இவர்கள் பாடிய பாடல்கள் ரசிகர்களையே பெரும் வரவேற்பை பெற்றது.
  
மேலும் செந்தில் கணேஷ் கரிமுகன்  என்ற படத்தில் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர்கள் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் `மேக்ஓவர் ரவுண்ட்’ எனும் டாஸ்கிற்காக வேஷ்டி, சேலையில் மட்டுமே வந்த செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர் இதுவரை பார்த்திராத வகையில் மிகவும் மாடர்னாக உடையணிந்து வந்து கலக்கினார்கள்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

senthil, rajalakshmi wearing western clothes in tv show


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->