கவலைக்கிடமான நிலையில் சீமான் பட இயக்குனர்.!! - Seithipunal
Seithipunal


2007 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் வெளியான படம் எவனோ ஒருவன். இதில் இயக்குனர் சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், முன்னணி கதாபாத்திரங்களில் மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான டோம்பிவாலி ஃபாஸ்ட் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நிஷிகாந்த் காமத். இப்படத்தை தமிழில் மாதவனை வைத்து 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதுதவிர ஏராளமான திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் நிஷிகாந்த் காமத், கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman movie director nishikant kamat hospitalized


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal