சந்தானத்தின் அடுத்த படம் க்ரைம் த்ரில்லர்? – ‘தில்லுக்கு துட்டு 3’ வருகிறதா? கதைக்காக ராஜேஷ் குமாரை நேரில் சந்தித்த சந்தானம்!
Santhanam next film is a crime thriller Is Dillukku Thudtu 3 coming Santhanam met Rajesh Kumar in person for the story
காமெடி நடிகராக பிரபலமான சந்தானம், கடந்த பத்து ஆண்டுகளாக ஹீரோவாக தொடர்ந்தாலும் பெரிய வெற்றி கிடைக்காமல் சற்று போராடி வருகிறார். ‘தில்லுக்கு துட்டு’, ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘சபாபதி’ உள்ளிட்ட படங்கள் சில வெற்றி பெற்றாலும், மற்ற பல படங்கள் எதிர்பார்த்த நிலைக்கு வராதது உண்மை. சமீபத்தில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் கூட பெரும்பான்மையான வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், எப்படியும் ஒரு மெகா ஹிட்டை கொடுக்கவேண்டும் என்று உறுதி கொண்ட சந்தானம், தனது அடுத்த படத்துக்கான பணிகளை வேகமாக தொடங்கியுள்ளார். இந்த முறை காமெடி அல்ல, க்ரைம் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகுகிறது என்பதே முக்கிய அம்சமாகும்.
இதற்காக எழுத்தாளர் ராஜேஷ் குமாரை சந்தானம் நேரில் கோயம்புத்தூரில் சென்று இரு நாள் கதையாலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதை ராஜேஷ் குமார் தானே தனது முகநூலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர்,
“சார்… என் அடுத்த படத்துக்கு உங்க பங்களிப்பு வேணும்… ஒரு க்ரைம் த்ரில்லர் கதை… கோயம்புத்தூருக்கு வர்றேன்… உங்க கூட இரு நாள் தங்கி விவாதிக்கணும்…” என சந்தானம் அழைத்ததாக கூறியுள்ளார்.
கதை விவாதம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், படம் ‘தில்லுக்கு துட்டு 3’ ஆக இருக்கலாம் என ராஜேஷ் குமார் சுட்டிக்காட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஷ் குமார் முழு கதையையா எழுதுகிறார், அல்லது சில முக்கிய பங்களிப்புகளை மட்டுமே செய்கிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
சந்தானம் ஒரு பெரிய ஹிட் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த க்ரைம் த்ரில்லர் படம் அவருக்குச் சரியான திருப்புமுனை ஆகுமா என்பதைக் கவனமாக காத்திருக்கிறது கோலிவுட்.
English Summary
Santhanam next film is a crime thriller Is Dillukku Thudtu 3 coming Santhanam met Rajesh Kumar in person for the story