அஜித் ரசிகர்கள் போல, சமூக சேவையில் இறங்கிய சந்தானம் ரசிகர்கள்..!  - Seithipunal
Seithipunal


சந்தானம் ஹீரோவாக வலம் வரத் தொடங்கிய நாள் முதல் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகின்றது. வெறும் நகைச்சுவை என்பது போய் என்டர்டைன்மென்ட், ஆக்சன் என தற்போது அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து வருபவர் சந்தானம்.

ஆங்காங்கே சந்தானத்திற்கு ரசிகர் மன்றமும் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் ஹிட் கொடுத்து வரும் சந்தானத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். 

தற்பொழுது அகில இந்திய சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக வேலூர் மாவட்ட அரக்கோணம் ஒன்றிய தலைமை மூதூர் கிளையில் அகில இந்திய தலைவர் கே.குமாரவேல் மற்றும் மாநில துணைத் தலைவர் ஏ கே எஸ் ஜீவா உள்ளிட்டோரின் தலைமையில் ஒன்றிய தலைவர் சே.ரகு ஒத்துழைப்போடு சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இது குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சந்தானத்தின் ரசிகர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sandhanam fans in social service


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->