சண்டக்கோழி 2 படத்தின், இசை வெளியீட்டு விழா... படக்குழு தேதி அறிவிப்பு..!
சண்டக்கோழி 2 படத்தின், இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.
விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் "சண்டக்கோழி-2". இப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறது. விஷாலுக்கு வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
சண்டக்கோழி-2 விஷாலின் 25-வது படம். இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியாகிய "செங்கரட்டான் பாறையில" என்ற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கம்பத்து பொண்ணு’ என்ற மெலடி பாடலின் டீசர் வெளியானது. யுவனின் இசையமைத்து, அவரே பாடிய பாடல் இது என்பதால், முழுப் பாடலையும் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
இந்நிலையில், சண்டக்கோழி-2 படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற இருப்பதாக பாழாக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Sandakozhi 2 song release date