ஜிம்மில் வெறித்தனமான வொர்க்கவுட்.. சனம் ஷெட்டி ஹாட் வீடியோ.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளர்களுடன் மனதில் பட்டதையெல்லாம் நேர்மையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவர் சிலரது எதிர்ப்பை பெற்றாலும், பல சமயங்களில் பலரது பாராட்டையும் பெற்றார். 

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சனம் வெளியேறியபோது #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக்கும் வைரலானது. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் கூட்டமும் உருவானது. சனம் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷனை காதலித்ததாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டது. 

மேலும் இருவரும் மாறி மாறி போலீசில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் சனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sanam shetty Instagram Gym video viral


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->