விஜய் தேவர்கொண்டா-சமந்தா சென்ற கார் கவிழ்ந்து விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் சமந்தா தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக 'குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் விஜய் நிர்வாணா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது நேற்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அதிரடி ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது.

அப்போது அந்த காட்சியின் போது இருவரும் வாகனத்தில் ஆற்றை கடந்து செல்வது போல எடுக்கப்படும் போது, எதிர்பாராதவிதமாக கீழே தவறி ஆற்றில் மூழ்கினர். இதனைப் பார்த்த படக்குழுவினர் உடனடியாக விரைந்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். அதன் பின் இருவருக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

இருவருக்கும் முதுகில் சற்று அதிக வலி இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் இவர்களுக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் குணமாகி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Samantha and Vijay Devarkonda car accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->