திரையில் இடமில்லாமல் நீக்கம்...! ஆனால் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த ராஷ்மிகா பாடல்...!
Removed due to lack of space screen But Rashmikas song took first place trending
ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் ‘தி கேர்ள்பிரெண்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நதிவே’ பாடல் சமீபத்தில் வெளியானது. ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமாக படமாக்கப்பட்ட இந்தப் பாடல், அழகான காட்சியமைப்பு மற்றும் ராஷ்மிகாவின் வெளிப்பாட்டால் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.

ஆனால் அதிர்ச்சியாக, இப்படத்தின் இறுதி பதிப்பில் ‘நதிவே’ பாடலை நீக்க தீர்மானித்துள்ளதாக தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காரணம், அந்தப் பாடல், கதையின் உணர்ச்சி ஓட்டத்துடன் சரியாக பொருந்தவில்லை என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், படத்திலிருந்து நீக்கப்பட்டாலும், ‘நதிவே’ பாடல் இணையத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்து தொடர்ந்து டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. இதனால், ராஷ்மிகாவின் கவர்ச்சியும், இசையின் மாயமும் இணைந்த இந்த பாடல், திரையில் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துவிட்டது.இந்நிலையில், ‘தி கேர்ள்பிரெண்ட்’ படம் வரும் நவம்பர் 7ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வர உள்ளது.
English Summary
Removed due to lack of space screen But Rashmikas song took first place trending