தெய்வமகள் அண்ணியாருக்கு இப்படி ஒரு மகளா.?! உச்சுக்கொட்டி ரசிக்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


சன் டிவி நிகழ்ச்சியில் சுமார் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் தான் தெய்வமகள். இதில், சத்யாவாக நடித்த வாணி போஜன் தற்போது கோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்ற கதாநாயகியாக மாறிவிட்டார். இந்த சீரியலில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில், கதாநாயகனின் அண்ணியாக, நடித்து பயங்கர வில்லியாக இருந்தவர் இவர். இந்த சீரியலின் மூலமாக பெரும் அளவில் பிரபலமடைந்தார் ரேகா கிருஷ்ணப்பா.

இதன் பின்னர், அவர் ஒரு சில சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனம் மிக்க நடிப்பால் பலரையும் மிரளவைத்து இருக்கின்றார். அதன் பின், பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் நடிப்பிற்கு சில காலங்கள் இடைவெளி விட்ட ரேகா தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற தமிழும், சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். நடிகை ரேகா கிருஷ்ணப்பா எப்பொழுதும் சோஷியல் மீடியாக்களில் படு பிஸியாக இருப்பவர்.

அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்துவார். இத்தகைய நிலையில் ரேகா கிருஷ்ணப்பாவின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rekha krishnappa daughter photo viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->