அந்த 4 இடம்.. குறிவைத்த ரெட் ஜெயண்ட்.. வாங்கப்பட்ட 'வாரிசு' உரிமை.!
Red jaint Movie bought 4 place of varisu release
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.
இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த நிலையில், இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை மற்றும் ஆற்காடு உள்ளிட்ட இடங்களில் படம் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வாங்கியது.
English Summary
Red jaint Movie bought 4 place of varisu release