''ரத்னம்'' திரைப்படத்தின் நியூ அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!
Rathnam movie New update
ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ரத்னம்''. இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சவுத் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
'ரத்னம்' திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.