பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் இணைந்த தந்தை-மகன்.! வெறித்தனம்.. வெறித்தனம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படத்தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவும், நடிகர் கமலஹாசன் அரசியலில் மும்முரமாக இருந்ததாலும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் இயக்குனர் சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக பிரபல பாலிவுட் கதாநாயகி கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் மேலும் இந்த படத்தில் தெலுங்கில் பிரபல நடிகரும், நடிக்க ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தந்தையும், மகனும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramcharan dad on Shankar Movie


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->