இவர் தான் ரகுல் பிரீத் சிங்கின் காதலரா?..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


நடிகை ரகுல் பீரித்சிங் இன்ஸ்டாகிராமில் தனது காதலர் யார் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முண்ணனி நடிகையாக வலம்வருவபவர் ரகுல் பிரீத் சிங். இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

இந்நிலையில், நேற்று ரகுல் பீரித் சிங்கின் பிறந்தநாள். இதற்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதனிடையே பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்நானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், அவர் நீ இல்லாமல் என் நாள் சுவாரசியமாகவே இல்லை, என் வாழ்வின் முக்கியமான அழகான ஆத்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரகுல் பிரீத் சிங் “நன்றி என் காதலே இந்த ஆண்டு கிடைத்த மிக பெரிய பரிசு நீ, என் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுகளை பார்த்த அவர்களது ரசிகர்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து இருவருக்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rakul Preet Sigh Confirm his Reletionship


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal