மீண்டும் அரசியலில் களமிறங்கும் ரஜினி? பிரபல கட்சித்தலைவருடன் நேரில் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இதனையடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth meet Chandrababu Naidu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->