ரஜினியின் ஜெயிலர் படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியீடு.. என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்து திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இந்த படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth in Jailor movie get U/A certificate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->