விக்ரம் படத்தின் வசூல் சாதனையை நெருங்கும் ஜெயிலர்.. இதுவரை இத்தனை கோடியா.? - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி திரைத்துறை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு வெளியான இந்த திரைப்படம் வெற்றிகரமாக தற்போது திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.450 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.260 கோடி வசூல் செய்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்திற்கு அனைத்து ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால், இந்தப் படத்தில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மொத்தமாக 500 கோடி வசூல் செய்த நிலையில், தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெறும் 6 நாட்களில் 450 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini in jailor movie collected 450 crores


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->