'தலைவர் எப்போதும் டாப்' .. ரஜினியின்'ஜெயிலர்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸான ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியது.

இதனையடுத்து நேற்று ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழாவைப் போல ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அனைத்து திரையரங்களிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் ரூ.29.46 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் இந்த திரைப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் என்ற சாதனையை படைத்துள்ளது.

மேலும், வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் ஜெயிலர் திரைப்படம் வசூலை வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023ம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்

ஜெயிலர் - ரூ.29.46 கோடி

துணிவு - ரூ.24.59 கோடி

பொன்னியின் செல்வன் 2 - 21.37 கோடி

வாரிசு - ரூ.19.43 கோடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini in jailor movie collected 29 crores in day 1


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->