ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் பல லட்சம் கொள்ளை.. பணிப்பெண் ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் தனியாக வசித்து வருகிறார்.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடுபோனது குறித்து வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி (வயது 40) என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

 ஈஸ்வரியின் சமீபத்திய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் அவர் திருடியது உறுதி செய்யப்பட்டாதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini daughter Ishwarya home robbery case one worker arrested


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal