10 ஆண்டுகளுக்குப் பின் நயன்தாராவுடன் ஜோடி போடும் நடிகர்! நயன்தாரா 75 புதிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான். சினிமா வாழ்க்கையில் எண்ணற்ற ஏற்ற தாழ்வுகளையும் கடந்து  15 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய முத்திரையை பதித்தவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமான இவர்  தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி  ஹீரோக்களுடனும் நடித்து இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்.

இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இவர் நடித்த கனெக்ட் என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் நயன்தாராவின் மார்க்கெட் சரிந்தது என்று கோலிவுட்டில் சிலர் பேசி வந்தனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அட்லி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாராவின் 75 ஆவது திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு  தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கான பூஜையும் எளிமையான முறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

சார்பட்டா  2 திரைப்படத்தை தயாரிக்கும் நாத் எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இத்தனை படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக ராஜா ராணி படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஜெய் நடிக்க இருக்கிறார். மேலும் இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில்  ஆரம்பிக்கப்பட்டு இந்த வருட இறுதியிலேயே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raja rani actor to team up with nayanthara for her 75th film


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal