என் வாழ்க்கை படத்துக்கு சமந்தா வேண்டாம் இவர் தான் வேண்டும்.! பிவி சிந்துவின் அதிரடி பதில்.! - Seithipunal
Seithipunal


எனது வாழ்க்கை கதைக்கு சமந்தாவை விட பிரபல நடிகை நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்தார். 

இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்றார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பட தயாரிப்பாளர்கள் பேசினர். அவரும் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். தனது வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதற்கு பி.வி.சிந்து வாழ்த்தும், நன்றியும் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மாறுபட்ட கருத்து கூறி அதிர்ச்சி தந்திருக்கிறார்.

‘உங்கள் வாழ்க்கை கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்று பி.வி.சிந்துவிடம் கேட்டபோது,’எனது வாழ்க்கை கதையில் சமந்தாவை விட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் அவரும் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை.

ஆனாலும் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை பட தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p.v.sindhu life movie


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal