பாலிவுட்டில் அந்த நடிகையுடன் ஜோடிபோடும் பிரேம்ஜி.! நம்பமுடியாத தகவல்.!
premji in bollywood
பிரேம்ஜி அமரன் பிரபுவின் அனைத்து படங்களிலும் நடிக்கும் ஒரு நடிகர் ஆவார். மேலும், வெங்கட் பிரபு கதை இல்லாமல் கூட படம் எடுப்பாரே தவிர, தம்பி இல்லாம எடுக்க மாட்டார் என்ற நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் வகையில் பிரேம்ஜியை வைத்து படம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில படங்களுக்கு இசையப்பாளராகவும் உள்ளார்.
சிம்புவோடு மாநாடு படத்தில் நடித்த இவர் இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தின் ஒரே கல்யாணமாகாத பேச்சிலராக இருக்கிறார். இந்தநிலையில் பிரேம்ஜி பாலிவுட்டுக்கு போகிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?..ஆனால். இது உண்மைதான்.

மாநாடு படத்திற்கு பின் பாலிவுட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை டாப்ஸியை வைத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்கும் முயற்சியில் வெங்கட்பிரபு ஈடுபட்டு உள்ளார். மேலும், ஒரு வேளை டாப்ஸி நடிக்கவில்லை என்றாலும் வித்யாபாலன் நடிக்க வெங்கட்பிரபு முடிவெடுத்து இருக்கிறார்.
ஆனால், யார் நடித்தாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரேம்ஜி உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிப்பதையே ரசிகர்கள் கிண்டல் அடித்து இருக்கிறார்கள். ஆனால், தற்போது அவர் பாலிவுட்டில் நடித்தால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து மட்டுமே காண முடியும்.