பூஜா ஹெக்டேவின் டூர் முடிஞ்சதும், முதல் வேலையே சூப்பர் ஸ்டார்களுடன் கைக்கோர்ப்பது தான்.! - Seithipunal
Seithipunal


நடிகை பூஜா ஹெக்டே வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை முடித்து திரும்பியவுடன் இரு சூப்பர் ஸ்டார்கள் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

 நீண்ட இடைவெளிக்குப் பின் சமீபத்தில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அத்துடன் நடிகர் பிரபாஸுடன் சேர்ந்து ராதேஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.

தற்போது இவர் லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே சல்மான்கான் திரைப்படத்திலும், மகேஷ்பாபு திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவரது வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்தவுடன் அவர் சூப்பர் ஸ்டார்களான மகேஷ் பாபு மற்றும் சல்மான்கான் இருவரது திரைப்படத்தில நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooja Hegde may act with 2 super stars after tour


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal