பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ள பூஜா ஹெக்டே.. ஹீரோ மற்றும் இயக்குனர்கள் இவர்களா.?!  - Seithipunal
Seithipunal


முகமூடி திரைப்படத்தை போலவே நடிகை பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. அடுத்ததாக பூஜா ஹெக்டேவிற்கு கோலிவுட்டில் புதிய திரைப்படங்களில் உடனே கமிட் ஆகாமல் இருந்து வருகின்றார். 

அத்துடன் ஹிந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் தற்போது கவனம் செலுத்திக் கொண்டு இருக்கின்றார். இதே நேரத்தில் பாலா இயக்குகின்ற தன்னுடைய 41 வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். மேலும், சூர்யா தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்திற்கு முன்பே சிறுத்தை சிவா இயக்குகின்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்த திரைப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது துவங்கப்பட்டிருக்கின்ற நிலையில், இதில் சூர்யாவுக்கு ஹீரோயினாக பூஜா ஹெக்டேவை நிர்ணயிக்க படக்குழு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றார் இயக்குனர் சிவா. இதனை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிட்டிருப்பதால் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என்று 3 மொழிகளுக்கும் பொதுவான நடிகர் நடிகைகளை நடிக்கவைக்க முடிவெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, 3 மொழி ரசிகர்கள் மத்தியிலும் பூஜா ஹெக்டே பிரபலமடைந்தவர் எனும் காரணத்தினால் இதில் நடிக்கவைக்க சிறுத்தை சிவா ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooja Hegde in pan India film


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal