தனுஷ் படத்தில் இணையும் பாலிவுட் நடிகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கும் நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனது 50-வது படமான 'ராயன்' படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் மட்டுமல்லாமல் தமிழ் தாண்டி இந்தியிலும் 'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அத்ராங்கி ரே' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் மீண்டும் கடந்த இரு படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராயுடன், இணைய போவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தொடங்கலாம் என்றும், முதல்கட்டமாக வாரணாசியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காதலை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

polywood actor joined work dhanush movie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->