விதிகளை மீறும் பாரு–கம்ருதீன்..யாரும் இல்லாத அறையில் எல்லை மீறி அட்டகாசம்!...பிக் பாஸ் சத்தம் கேட்டு அலறியடித்து ஓட்டம்!
paru Kamruddin who break the rules they go beyond the limits in an empty room they run away screaming after hearing the Big Boss voice
68 நாட்களை கடந்த பிக் பாஸ் சீசன் இப்போது தல தலா வழக்குகளாலும், தண்டனைகளாலும் செம்ம சூடு பிடித்து வருகிறது. இந்த வாரம் நடைபெறும் BB வழக்காடு மன்றம் பார்வையாளர்களுக்கு ஒரு லாவகமான அனுபவமாக மாறியுள்ளது. போட்டியாளர்களின் புகார்–விசாரணை–தீர்ப்பு என நீதிமன்ற நாடகம் போல் நிகழ்ச்சி நகர்கிறது.
முதலில், வினோத் – ஆதிரை வழக்கில் வினோத் மீது தவறாக குற்றம் சாட்டி வருவதாகக் கூறி, வினோத் வழக்கு தொடர்ந்தார். வினோதின் சார்பில் விக்ரம் வழக்கறிஞராகவும், ஆதிரை சார்பில் அரோரா வாதாடவும், இறுதியில் திவாகரின் வெளியேற்றத்துக்கு வினோத் காரணம் இல்லை என தீர்ப்பு வந்தது.
இதற்கிடையில், வீட்டுக்குள் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியவர்கள் பாரு மற்றும் கம்ருதீன். இருவரும் அடிக்கடி மைக்கை மறைத்து ரகசியமாகப் பேசுவது பிக் பாஸ் விதிமுறைக்கு எதிரானது. எத்தனை முறை அறிவுறுத்தியும் நிறுத்தாததால், பிக் பாஸ் கடும் நடவடிக்கை எடுத்தார். அவர்களுக்காகவே பால், முட்டை, தேநீர், காபி தூள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அனைவரிடமிருந்தும் பிக் பாஸ் மீட்டுக்கொண்டார்.
இதன் பேரில், ரம்யா, சுபிக்ஷா, சாண்ட்ரா, திவ்யா உள்ளிட்ட பலர் பாரு–கம்ருதீனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். “தவறு செய்யும் இருவருக்காக வீட்டிலுள்ள 12 பேரும் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?” என்பது போட்டியாளர்களின் கேள்வி.
இதில் இன்னும் பெரிய கண்டனம் எழுந்தது, விசாரணை முடிந்தபின் யாரும் இல்லாத சமயத்தில் பாரு–கம்ருதீன் வழக்காடு மன்ற அறைக்குள் மீண்டும் நீண்ட நேரம் ரகசியமாக இருப்பது. இதை கமராவும் பிக் பாஸும் கவனித்ததால், “பாரு… கம்ருதீன்…” என்று அழைத்தவுடன், இருவரும் பதறி அலறியபடி அறையிலிருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பார்வையாளர்கள் ஆவேசமாக,“இவர்களுக்கு ரெட் கார்டு தான் சரியான தண்டனை!”,“தொடர்ந்து விதி மீறுகிறார்கள்… இப்படியான நடத்தைக்கு அனுமதி தரக்கூடாது”என்று விமர்சன மழை பொழிந்து வருகின்றனர்.
மொத்தத்தில், இந்த சீசனில் அதிகமான விமர்சனங்களையும், விவாதங்களையும் ஈர்த்தவர்கள் பாரு–கம்ருதீனே என்பதில் மாற்றில்லை. அவர்களுக்கெதிரான அடுத்த நடவடிக்கை என்ன என்பதையே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
paru Kamruddin who break the rules they go beyond the limits in an empty room they run away screaming after hearing the Big Boss voice