கடைசியாக கூட தாய் முகத்தை பார்க்காத கண்ணன்.! பாண்டியன் ஸ்டோர்ஸின் சோக காட்சி.!  - Seithipunal
Seithipunal


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சகோதரர்களின் கூட்டுக்குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

இதில் மீனா - ஜீவா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தனம் கர்ப்பமாக இருக்கிறார். இதற்கிடையில், முல்லை கதிர் ஜோடிகளுக்கு இடையே ரொமான்ஸ் காட்சி துவங்கியது. அந்த நேரத்தில்தான் நடிகை சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். 

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலமாக பிரபலமடைந்து இருக்கிறார். 

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தாய் லக்‌ஷ்மி இறந்துவிட்டதாக கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. அவரது இறுதி சடங்கில் அண்ணன் தம்பிகள் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் கண்ணன் இல்லை. எனவே, லக்‌ஷ்மியின் இறுதிச்சடங்கில் கண்ணன் கலந்து கொள்ள மாட்டார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandiyan Stores lakshmi funeral not in kannan 


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal