‘ஓஜி’க்கு அடுத்த அதிரடி! இப்படம் இரண்டு மடங்கு மாஸ்...! - தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வைரல் ஸ்டேட்மெண்ட்...!
next big thing after OG This film twice mass Producer Ravi Shankars viral statement
பவன் கல்யாணின் ‘They Call Him OG’ வெளியானதும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வசூல் வெள்ளம் ஓடியது. அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தெலுங்கு படமாக ‘ஓஜி’ அதிகாரப்பூர்வமாக பெயர் பதிந்தது.
இதன் வெற்றிக்குப் பிறகு பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் அடுத்த மாஸ் என்டர்டெயினர் ‘உஸ்தாத் பகத் சிங்’ மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு விண்ணை தொடுகிறது.

இந்த நிலையில், இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ரவி ஷங்கர் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் தீபாவளி பட்டாசு போல பரவி வருகிறது. அவர் கூறியதாவது,“நீங்கள் ‘ஓஜி’யை ரசித்தீர்களானால், ‘உஸ்தாத் பகத் சிங்’ அதைவிட குறைந்தது 2 மடங்கு அதிகமான மாஸ் அனுபவம் தரும்.
பவன் கல்யாணின் தீவிர ரசிகரான ஹரிஷ் ஷங்கர் முழு உற்சாகத்துடன், மிக கடினமாக உழைக்கிறார். இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்".‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் பவன் கல்யாண் ஸ்டைலிஷ், ஆக்ஷன் நிறைந்த போலீஸ் அதிகாரி ஆக களமிறங்குகிறார். கதாநாயகிகளாக ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா இணைகின்றனர். இப்படத்தின் முதல் சிங்கிள் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்ப்பு சூடு பிடித்துள்ளது.
English Summary
next big thing after OG This film twice mass Producer Ravi Shankars viral statement