நயன்தாராவின் 'அன்னப்பூரணி': ரீலிஸ் தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் 'ஜவான்' இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'இறைவன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. 

பின்னர் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் 'மண்ணாங்கட்டி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். டூட் விக்கி இயக்கும் இந்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். 

மேலும் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு 'அன்னப்பூரணி' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 'அன்னப்பூரணி' திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara Annapurani Release Date


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->