ட்விட்டர் கணக்கை கை விட்ட ஹாரிஸ் ஜெயராஜ் - நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் மின்னலே மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இதைத் தொடர்ந்து அவர் மஜ்னு, 12பி, லேசா லேசா, கோவில் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இறுதியாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இதற்கிடையே, ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கச்சேரிகள் நடத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளார். 

அந்தக் கச்சேரியில் இடம் பெறும் சில பாடல்களின் மெட்டுக்கள் தற்போது சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, "வணக்கம் நண்பர்களே; என்னுடைய ட்விட்டர் கணக்கு கடந்த இரண்டு நாட்களாக ஹேக் செய்யப்பட்டுள்ளது. கணக்கு சரி செய்யப்பட்ட உடன் அதனை மீண்டும் பெறுவோம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

music directer harris jeyaraj twitter account close


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->