ரவி தேஜாவின் மிஸ்டர் பச்சன் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
mr pachan movie release date announce
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி தேஜா. 'கர்தவ்யம்' படத்தில் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய இவர் மாஸ் மஹாராஜா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
இவர் பெங்கால் டைகர், ராஜா தி கிரேட், வால்டேர் வீரய்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ரவி தேஜா ஹரிஸ் ஷங்கர் இயக்கிய 'மிஸ்டர் பச்சன்' படத்தில் நடித்துள்ளார்.
பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சுபலேகா சுதாகர் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் ரவி தேஜா போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அதாவது, "மிஸ்டர் பச்சன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
mr pachan movie release date announce