அஜித்திற்கு சாதி சாயம் பூசுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த திரெளபதி பட இயக்குனர் மோகன் ஜி..!  - Seithipunal
Seithipunal


ழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் இறங்குகிறது திரௌபதி. இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

இளைஞர்களை சுயலாபத்திற்காக மூளைச்சலவை செய்து பெண்களுக்கு எதிராக நாடக காதல் நிகழ்த்த செய்கின்றனர் என்று கூறுவதை காண இயலும். முழு படம் வெளியானால் மட்டும்தான் இந்த படம் குறித்த சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இயலும்.இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் படத்தின் மீது வழக்கு தொடுப்பதாகவும், படக்குழுவினருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

காதல் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மற்றும் வசதி வாய்ந்த பெண்களிடம் ஆசையாக பேசி அவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்று அதன் பிறகு, அவர்களது பெற்றோர்களிடம் உங்கள் பொண்ணு எங்க கிட்ட தான் இருக்கு, பணம் கொடுத்துவிட்டு கூட்டிக்கொண்டு போ.. என்று மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பற்றி பலருக்கும் தெரியப்போவதில்லை. பெண்ணை அழைத்து வந்தது போல அப்படியே கொடுத்தால் ஒரு தொகை, கர்ப்பமாக்கி கொடுத்தால் ஒரு தொகை என்று இந்த கும்பலின் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் செல்கிறது. 

இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் போலீஸிடம் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அந்த பெண்ணோ நான் விரும்பி தான் இவன் கூட வந்தேன் என்று சொல்லும். அந்த அளவுக்கு அந்த பெண்ணை மூளைச்சலவை செய்திருப்பார்கள்.

Image result for திரௌபதி seithipunal

அப்படி அந்த பெண்ணின் பெற்றோர்கள் பணம் கொடுக்க மறுத்து, போலீஸ் , கோர்ட் என்று சென்றால், அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அந்த பழியை அவரது பெற்றோர் மீது போட்டு ஆணவ கொலை செய்துவிட்டார்கள் என்று திருப்பி விடும் சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதை பற்றியெல்லாம் தெரியாத பெண்கள் ஆசை வார்த்தையில் மயங்கி, மதிகெட்டு அவர்கள் பின் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த பெண்ணும், பெண்ணின் பெற்றோர்களும் தான். 

இதை பற்றி வெளியே சொன்னால் குடும்பம் மானம் பறி போய்விடும் என்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா.? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது தான் அப்பட்டமான உண்மை. 

மேலும், இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் அஜித்தின் மைத்துனன் நடித்திருப்பதால் அஜித்தை சாதிய சாயம் பூசி ஒரு தரப்பு இழிவாக பேசி வருகிறது. நடிகர் அஜித் சாதிய படங்களை ஆதரிக்கிறாரா.? என்பது போல் பல தரப்பில் சர்ச்சைகளை எழுப்பி வந்தது. அதே போல், இந்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி, நடிகர் அஜித்துடன் எப்போதோ எடுத்து கொண்ட புகைப்படத்தை பரப்பி பரபரப்பை ஏறப்டுத்தினார்கள். 

Image result for திரௌபதி seithipunal

அனால், அது எப்போதோ ஒரு ரசிகனாக அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று மோகன் ஜி பதிலளித்திருந்தார். ஆனால் சில பத்திரிகைகள் இதை இன்னும் சர்ச்சையாக்கி கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒரு பிரபல வார இதழ், ‘’சாதி வெறியை ஆதரிக்கிறாரா அஜித்? உண்மை என்ன? என்கிற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டிருந்தது.

இதை பார்த்த இயக்குனர் மோகன் ஜி, அதற்கு அமைதியான பதிலை மிகவும் அழகா தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், " இந்த வார குமுதத்தில் #திரெளபதி பற்றி கட்டுரை எழுதி சம்மந்தமில்லாத மனிதரை சம்மந்தப்படுத்திய அந்த நபர்களுக்கு நானும் என் மகளும் தரும் அன்பு பரிசு இதான்.. என்றும் #தல என் மரியாதைக்குரியவர்.." என்று தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mohan g tweet about ajith issue


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal