எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம்.! மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பொன்ராம் தற்போது சசிகுமார், சமுத்திரக்கனி, சத்யராஜை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம், எம்.ஜி.ஆர் மகன் ஆகும்.  சத்யராஜும், சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் இப்படத்தை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்து உள்ளது.

மார்ச் மாதத்தில் இந்த திரைப்படத்தை வெளிவிட முயற்சி செய்தனர். பல்வேறு காரணங்களால் அது முடியாமல் போக, ஓடிடி-யில் தான் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் வெளியாகப் போகிறது என்று சிலர் கிளப்பிவிட்டனர். அதற்கு தயாரிப்பு நிறுவனம் தங்களது விளம்பரம் மூலமாக மறுப்பு தெரிவித்து உள்ளது.

எம்.ஜி.ஆர் மகனின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது. அந்த போஸ்டரில் ஏப்ரல் 23-ம் தேதி திரைப்படம் வெளியாவதாக குறிப்பிட்டு உள்ளனர். திரைப்படம் தியேட்டரில் வெளியாவதை சுட்டிக்காட்டும் விதமாக, 50% ஆடியன்ஸ், 100% என்டர்டெயின்மெண்ட் என குறிப்பிட்டுள்ளனர்.

காமெடி, சென்டிமெண்ட், காதல் என இயக்குனர் பொன்ராமின் 100% பொழுதுப்போக்கு ஃபார்முலாவில் இந்த படம் தயாராகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

M.G.R Magan movie update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal