கைது செய்யமுடியவில்லை! தண்ணி காட்டிய நடிகை மீரா மிதுன் - நீதிபதி முன் வெறுங்கையோடு தமிழக போலீஸ்! - Seithipunal
Seithipunal


பிடிவாரண்ட் பிறப்பித்தும் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என்று, நீதிபதி முன் வெறுங்கையோடு தமிழக காவல் துறை நின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தலைமறைவாகியுள்ள நடிகை மீரா மிதுன் அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால், அவரை கைது செய்ய முடியவில்லை என்று, நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்த வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால், கடந்த 3 மாதங்களாகவே நடிகை மீரா மிதுன் தலைமறைவான வழக்கை நடித்து வருகிறார்.

அவரை கைது செய்ய முடியாமல் ஏற்கனவே இருமுறை நீதிமன்றத்தில் போலீசார் வெறுங்கையோடு நின்ற நிலையில, இன்றும் நீதிபதி முன் வெறுங்கையோடு போலீசார் நின்று விளக்கமளித்தனர்.

அதில்,  நடிகை மீரா மிதுன் அவரின் செல்போன் அணைத்து வைத்துள்ளதாவும், கிடைத்த அவ்வப்போது மாற்று வருவதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.

ஏற்கனவே 2 மாதங்களுக்கு மேல் பிடிவாரண்ட் நிலுவையில் இருக்க, இன்றும் போலீசார் வெறுங்கையோடு நின்று விளக்கமளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியை அதிருப்தி அடைய செய்துள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mithun case sep 2022


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal