''மாயாண்டி குடும்பத்தார்'' திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Mayandi Kudumbathar movie Second Part update
'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை தயாரித்த நிறுவனம் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது.
சீமான், தருண் கோபி, சிங்கம்புலி, மணிவண்ணன், பொன்வண்ணன் என இயக்குனர் பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தை மறைந்த இயக்குனர் ராசு மதுரவன் இயக்கியிருந்தார். எளிய குடும்பக் கதையையும் பங்காளி சண்டையையும் மயமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படம் பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை ஜகன் இயக்க உள்ளதாகவும் படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் நடிக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
English Summary
Mayandi Kudumbathar movie Second Part update