''மஞ்சும்மல் பாய்ஸ்'' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களிடமும் ''ED'' அதிரடி விசாரணை! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunalமலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி உலக அளவில் வெளியாகி ரூ. 241 கோடி வசூலித்தது. 

மலையாள திரை உலகில் மிகப்பெரிய வசூலை குவித்து திரைப்படங்களின் பட்டியலில் இந்த திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. 

சமீபத்தில் இந்த திரவத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக தெரிவித்து ஏமாற்றிவிட்டதாக சிராஜ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்காக தான் ஏழு கோடி முதலீடு செய்து இருந்ததாகவும் லாபத்தில் 40% தருவதாக தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் தற்போது வரை லாபத்தில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை எனவும் தான் முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில் மஞ்சள் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மற்ற தயாரிப்பாளர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manjummal Boys producers ED investigation


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->