மாநாடு படத்தை திரும்பவும் கையிலெடுத்த சிம்பு!! பிரமாண்டமாக வெளியிட திட்டம்!! - Seithipunal
Seithipunal


வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு படப்பிடிப்பு குறிப்பிட்ட நாளில் தொடங்காததால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மாநாடு படம் கைவிடப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார். மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அன்பு தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவது, நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. என தெரிவித்த சுரேஷ் காமாட்சி மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக தெரிவித்தார். 

இந்நிலையில், இது குறித்து மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் தெரிவித்ததாவது. மாநாடு படத்தில் சிம்புவுடன் பணியாற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அதே போல காலம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த முடிவினை ஏற்றுக் கொள்கிறேன் என  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மகா மாநாடு என்ற படத்தை தானே தயாரித்து இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகா மாநாடு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

English Summary

manadu film produced by simbu


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal