நெட்ஃப்ளிக்ஸ் உலக அளவிலான டாப் 10 படங்களில் இடம் பிடித்த 'மாமன்னன்'! - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்கத்தி உருவான 'மாமன்னன்' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஒரே வாரத்தில் 12 லட்சம் பார்வைகளைப் பெற்று, உலக அளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்கி இருந்த திரைப்படம் 'மாமன்னன்'. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது. 

இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் தங்களது நடிப்பை வெளிப்படுத்திருந்தனர்

ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படம் கட்சிக்குள் இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாக சொன்னதால் பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. 

ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படம் கடந்த 27ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இப்படம் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில், வெளியான நாள்முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 'மாமன்னன்' பிடித்துள்ளது. அதில் இந்தியா, கத்தார், துபாய் உள்ளிட்ட மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும், ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இடம் பெற்றுள்ளது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mamannan in top 10 worldwide on Netflix


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->