#BREAKING:தடைகளை தாண்டிய மாநாடு.... நாளை முதல் திரையரங்குகளில்.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா, கருணாகரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்தப்படத்தை வி ஹவுஸ் புரோடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மாநாடு திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது மாநாடு படம் ரிலீஸ் தள்ளிப் போகிறது என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

அதில் நெட்டிசன்கள் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மாநாடு படத்தை வெளியிட விரும்பியதாகவும் அதற்கு மாநாடு படக்குழு சம்மதிக்கவில்லை என்பதால் முட்டுக்கட்டை போடும் விதமாக தியேட்டர்களில் மற்றும் பொது இடங்களில் ஒரு தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது என்றும், அண்ணாத்த படத்தை ரெட்ஜெயன்ட் மூவி வெளியிட்டதால் அப்போது மட்டும் கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழை தமிழக அரசு கேட்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இது குறித்து படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் நாளை நிச்சயம் மாநாடு படம் ரிலீஸ் ஆகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு," கடவுள் இருக்கான் குமாரு #manadu" என்று ட்வீட் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mahanadi may release tomorrow


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->