மீண்டும் விஜய் டீவியில் தலைகாட்டும் லாஸ்லியா.! ரசிகர்கள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


இலங்கை பெண்ணான லாஸ்லியா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஆரம்பத்தில் நண்பர்கள், சேரனுடன் அப்பா பாசம் என்று கொண்டாட்டத்துடன் சுற்றிவந்த லாஸ்லியா அதன்பின்னர் காதலில் விழுந்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் லாஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் அதிகப்படியான வாய்ப்புகள் காத்திருக்கின்றது என்று தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஜிம்மிற்கு சென்று உடலை மெருகேற்றி வருகிறார் லாஸ்லியா. மேலும், தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, தற்பொழுது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் முகம் காட்ட துவங்கியுள்ளார். ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று ஒரு லட்ச ரூபாய் வென்று மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Losliya re entry vijay television


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal