தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தளபதி 67 படத்தின் அப்டேட் எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 

லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற இந்த திரைப்படத்திற்கு தளபதி 67 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான பூஜை ஏற்கனவே நடைபெற்று விட்டது. ஆனால், இதுவரை படவேலைகள் ஆரம்பித்து விட்டதை பட குழு அறிவிக்கவே இல்லை.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்கேல் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது விஜய் 67 குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lokesh kanagaraj speech about thalapathy67 update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->