கல்லீரல் பாதிப்பு; சிசிச்சைக்காக உதவி கோரும் 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய்..! - Seithipunal
Seithipunal


துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அபிநய். 43 வயதான இவர் கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு வெளியிட்ட வீடியோ, சமூகவலைதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் உள்ளார்.

2002 இல் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார். செல்வராகவன் திரைக்கதை எழுதிய இப்படம் தனுஷின் முதல் படமாகும். இந்த படத்தில் தனுஷ் உடன் அபநய், ஷெரின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் தனுஷ் அபிநய், ஷெரின் என மூவருக்குமே ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து அபிநய் ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கும் பெயரை கொடுக்கவில்லை.

அதன் பிறகு அவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், பாலைவன சோலை போன்ற படங்களில் துணை கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு   துப்பாக்கி, அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர்தான் பின்னணி குரல் வழங்கி இருந்தார். சில  விளம்பரங்களில் அவர் நடித்திருந்தார்.

தற்போது அவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது.  அத்துடன், மேல் சிகிச்சைக்காக மேலும் தனக்கு 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அதனால் உதவி செய்யுமாறு உருக்கமாக கேட்டு பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அபிநய் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு  மாறி இருக்கிறார். அதே போல அவருடைய வயிற்றுப் பகுதி அளவுக்கு அதிகமாக வீங்கி இருக்கிறது. அவருடைய வயிற்றுப் பகுதியில் இருந்து டியூப் மூலமாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோக்களை அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Liver damage Thulluvato Ilamai actor Abhinay seeks help for treatment


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->