நடிகை த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல்.. அசத்தலான புகைப்படம் வெளியிட்ட லியோ படக்குழு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒரவரான தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். இந்தத் திரைப்படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் களம் இறங்குகிறார்.

இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் விரைவிலேயே இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் துவங்க இருக்கின்றன. இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தளபதி ரசிகர்கள் லியோ படத்தை பற்றிய அப்டேட்டை கேட்டுக் கொண்டே இருந்தனர். அதற்கேற்றார் போல பல ஆச்சரியமான அப்டேட்டுகள் படக்குழுவினரிடமிருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று நடிகை த்ரிஷாவின் 40வது பிறந்தநாள் முன்னிட்டு லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய்-த்ரிஷா புகைப்படத்தை வெளியிட்டு நடிகை த்ரிஷாவுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. தற்போது இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo team release actress thrisha birthday special photo


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->