செப்டம்பரில் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் வடிவேலு!! வெளியான முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுவதுமாக  வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதன்காரணமாக நடந்த சமரசங்கள்,   பேச்சுவார்த்தைகள், கருத்து வேறுபாடுகள் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

‘‘நிஜமாவே இம்சை அரசன்தான்ணே.. அது தொடர்பான பேச்சுவார்த்தை எல்லாம் முடிவுக்கு வந்திருச்சுன்ணே. இனி எந்த சூழ்நிலையிலும் அந்த படத்தை தொடப்போறதில்லை. 

இனிமே அதப்பத்தி  பேசவே வேண்டாம்னு தோணுதுண்ணே’’ என்று கூறிய  வடிவேலு, புது உற்சாகத்தோடு திரைக்களத்தில் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகி வருகிறார். அவர் கூறியதாவது :

‘‘சினிமாவுல நாம எந்தஒரு  விஷயம் செய்தாலும்,   நம்மளை தேடி வர  விஷயத்தை தொட்டாலும் அதன்  போக்காக  , என்னை ரசிக்கிற மக்களுக்கு எவ்ளோ சந்தோஷம் கொடுக்க முடியும்னு தேடி, ஓடிட்டிருக்கிற ஆளு நானு.

 அதுக்கு பிரதிபலனா இன்னைக்கு சமூகவலைத்தளங்கள்,செல்போனுன்னு புதுசு புதுசா வச்சிருக்காங்க  கைப்பெட்டிக்குள்ள எல்லாம் நம்ம காமெடிங்க பரவிக் கிடக்குது.

இந்தமாதிரி மகிழ்ச்சியை  மக்களுக்கும் கொடுத்துட்டு, நாமளும் அது வழியே அனுபவிக்கிற இன்பமே  தனி! அந்த மாதிரி சில விஷயங்களை பண்ணலாம்னு  இருக்கும்போது இடையில சில  பிரச்சினைகளும் வரத்தான் செய்யுது. 

எவ்ளோதான் கவனமா  இருந்தாலும், ‘பொண்டாட்டி கைபட்டா குத்தம், கால்பட்டா குத்தம்’னு சொல்றது மாதிரி, சினிமாவுல சில பேர் நடந்துக்குறாங்க . இதுக்கெல்லாம் நாம என்ன செய்ய முடியும்? அதனால, அதெல்லாத்தையும் தூக்கி ஓரம் வச்சிட்டேன். 

கொஞ்ச நாள் பொறுமையா  இருப்போம்னு நான்தான் நடிக்காம இருந்தேன். ஆனா, இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியதில்லை . ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சேர்த்த அனைவர்க்கும்  அது தெரியும்.

 எனது அடுத்த பட வேலைகளை செப்டம்பர் முடிவில்  அறிவிக்கப்போறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. வலுவான கூட்டணி, அசத்தலான கதைக்களம், மிரட்டுற ஃபர்ஸ்ட் லுக் என்று தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கறமாதிரி பிச்சு உதறப்போறோம்ணே!’’ என்று கலகலப்போடு முடிக்கிறார் நமது வைகை புயல் வடிவேலு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

latest update about vadivelu


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal