சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் "லால் சலாம்" திரைப்படம்! - Seithipunal
Seithipunal


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படம், கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விக்னேஷ் , லிவிங்ஸ்டன் , செந்தில் , ஜீவிதா , கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம்  இந்த படத்தை தயாரித்த நிலையில்,  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில்  இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 20-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lal Salaam movie on Sun Next ott site


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->