விஜய்-திரிஷா சர்ச்சைக்கு மத்தியில் பிரபலத்தைப் பற்றி கிருத்திகா உதயநிதி பதிவு...!
Krithika Udhayanidhi posts about popularity amidst Vijay Trisha controversy
சென்னையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சமீபத்தில் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த நிகழ்வில் இருவரும் ஒன்றாக தோன்றியது புதிய விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியதாக தகவல்கள் வெளியான சூழலில், நடிகையுடன் அவர் இணைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.இந்த சூழலில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ஒரு பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் அவர் பகிர்ந்த கருத்தில், “பிரபலம் என்பது யார்? மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள், எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான் ஒருவரை பிரபலமாக்குகிறது.
ஆனால் அந்த மக்களின் பார்வையே நானென்று நினைத்து, தங்களது சொந்த அடையாளத்தை இழக்கத் தொடங்கினால், அது கடுமையான சிக்கலுக்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளிவந்ததையடுத்து, அது நேரடியாக யாரையும் குறிப்பிட்டு எழுதப்படாதிருந்தாலும், சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் விஜய் தொடர்பான சர்ச்சைகளை நினைவூட்டும் வகையில் இருப்பதாக சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், கிருத்திகா உதயநிதி இந்த பதிவின் மூலம் நடிகர் விஜயை மறைமுகமாக எச்சரித்தாரா என்ற கேள்வியும் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Krithika Udhayanidhi posts about popularity amidst Vijay Trisha controversy