கிரண் பேடியின் வாழ்க்கை திரைப்படமாகிறது! " நாட்டு மக்களுக்காக பணியாற்றிய ஒவ்வொரு பெண்ணின் கதை '' - கிரண் பேடி!!
Kiran Bedi life becomes a movie
முன்னாள் காவல்துறை அதிகாரியும் முன்னாள் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான கிரண் பேடியின் வாழ்க்கை சினிமா படமாக இயக்கப்படப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர் உள்ளிட்ட பல பிரபலங்களின் வாழ்க்கை சினிமா படமாக வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு வேப் தொடராக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அந்த வரிசையில் இந்தியாவின் முன்னாள் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடியின் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. இந்த படத்தை குஷால் சாவ்லா இயக்க உள்ளதாகவும் கௌரவ சாவ்லா தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் கிரண்பேடி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை உட்பட இதர நடிகையின் நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்த படம் இந்தியாவில் பிறந்து படித்து நாட்டு மக்களுக்காக பணியாற்றிய ஒவ்வொரு பெண்ணின் கதை " என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரண்பேடி 1972ல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து டெல்லி, கோவா, மிசோரத்தில் பணியாற்றி உள்ளார். திகார் சிறையில் சீர்திருத்தங்கள் செய்து பாராட்டு பெற்றார். ஓய்வு பெற்றதும் புதுச்சேரி கவர்னராக பணியாற்றுகிறார். இந்தநிலையில் கிரண்பேடியின் வாழ்க்கை சினிமா படமாக தயாரிக்கப்பட உள்ள தகவல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
English Summary
Kiran Bedi life becomes a movie