கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! வெளியான டிரைலர்!ரீட்டாவாக கிரைம் காமெடியில் கலக்கவிருக்கும் கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh to star in Revolver Rita Trailer released Keerthy Suresh to star in crime comedy as Rita
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சைரன், ரகு தாதா படங்களுக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் மீண்டும் பெண்மையைக் கேந்திரமாகக் கொண்ட வித்தியாசமான கதையில் நடித்துள்ளார். ஜேகே சந்துரு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன், ஜான் விஜய் போன்ற பலர் நடித்துள்ளனர். இசை — சீன் ரோல்டன்.1970ல் விஜயலலிதா நடித்த கிளாசிக் படத்தின் பெயரையே இப்போது கீர்த்தியின் படமும் எடுத்துள்ளது.
டிரைலரில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக கீர்த்தி சுரேஷ் தோன்றுகிறார். காய்கறி வாங்க செல்லும் போது அவரது ஹேண்ட்பேக்கை கும்பல் திருடிச் செல்லும் காட்சி முக்கிய அம்சமாக வருகிறது. அந்த பையில் ரிவால்வர், ரத்தக் கறை படிந்த கத்தி இருப்பது கும்பலை பதறவைக்கிறது. அதன்பின் கீர்த்தி,“நான் டானும் இல்ல… போலீசும் இல்ல… ரா ஏஜெண்டும் இல்ல… பையை கொடுங்க!”என்று பேசும் நகைச்சுவை சண்டை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மகளிர் மட்டும் படத்துக்கு ஒத்த காமெடி — ஆக்ஷன் கலந்த பாணியில் ரிவால்வர் ரீட்டா இருக்கும் என டிரைலர் காட்டுகிறது.
விஜய் சேதுபதி இந்த டிரைலரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அவரது மகாராஜா பட குழுவினரே இந்த படத்திலும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.ரிவால்வர் ரீட்டா வரும் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
English Summary
Keerthy Suresh to star in Revolver Rita Trailer released Keerthy Suresh to star in crime comedy as Rita