கவினை அறைந்துவிட்டு, லொஸ்லியவை பார்த்து கவின் நண்பர் கூறிய வார்த்தை! மறைக்கப்பட்ட காட்சி உள்ளே.!! 
                                    
                                    
                                   kavin friend says losliya 
 
                                 
                               
                                
                                      
                                            விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை  கமல் தொகுத்து வழங்கி வருகிறார். நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் சமீபகாலமாக கவின், லொஸ்லியா காதல் கதை தான் பிரச்சனை அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. காதல் பிரச்சனையில் கவின் ஏற்கனவே பல சர்ச்சைகளில் உள்ளார். இந்த விவகாரத்தால் லொஸ்லியா பேரும் பிரச்சினையில் சிக்கினார். முதலில் இருந்தே சேரன் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களை போல் கவினை பிக்பாஸ் வீட்டில் சந்திக்க கவினின் நண்பர் நேற்று வந்தார். அவர் கவினை கேவலமாக திட்டி அவரது கன்னத்தில் பலார் என அறை விட்.டார். 
இது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. இதைத்தொடர்ந்து அவர் , லொஸ்லியாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்பொழுது அவர் லாஸ்லியாவைப் பார்த்து உன்னை நம்பி ஒரு நாடு இருக்கு, உனக்குனு ஒரு இமேஜ் வேற இருக்கு, இதெல்லாம் கெடுத்துககொள்ளாதே என அறிவுரை கூறினார். அந்த வீடியோ காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாத நிலையில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       kavin friend says losliya